இலங்கை அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக குசால் பெரேரா சாதனை!

Updated: Thu, Jan 02 2025 11:36 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி குசால் பெரேரா மற்றும் சரித் அசலங்காவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா சதமடித்து அசத்தியதுடன் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 101 ரன்களையும், சரித் அசலங்கா ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிம் ராபின்சன் 37 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 69 ரன்களையும், டேரில் மிட்செல் 35 ரன்களைச் சேர்த்த நிலையிலும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை மட்டுமே சேர்த்தது. இலங்கை தரப்பில் சரித் அசலங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இருப்பினும் நியூசிலாந்து அணி முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றதன் காரணமாக 2-1 என்ற கணக்கில் இந்த டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய குசால் பெரேரா ஆட்டநாயகன் விருதையும், இத்தொடர் முழுவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேக்கப் டஃபி தொடர்நாயகன் விருதையும் வென்றனர். இந்நிலையில் இப்போட்டியில் குசால் பெரேரா சதமடித்ததன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார். 

அதன்படி இப்போட்டியில் அவர் 101 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் எனும் குசால் மெண்டிஸின் சாதனையை முறியடித்துள்ளார். இதுதவிர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக இரண்டாயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதுவரை 77 போட்டிகளில் விaளையாடியுள்ள குசால் பெரேரா 2056 ரன்களைச் சேர்த்துள்ளார்.

மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக சதமடித்து அசத்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் குசால் பெரேரா பெற்றுள்ளார். முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரார் திலகரத்னே தில்ஷன் கடந்த 2010ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும், மஹேலா ஜெயவர்தனே 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இலங்கை அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் (டி20-இல்)

  • குசால் பெரேரா - 2056 ரன்கள்
  • குசால் மெண்டிஸ் - 1920 ரன்கள்
  • திலகரத்னே தில்ஷன் - 1889 ரன்கள்
  • பதும் நிஷங்கா - 1734 ரன்கள்
  • மஹெலா ஜெயவர்தனே - 1493 ரன்கள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை