டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

Advertisement

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதற்காக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டி20 தொடரிலிருந்து விலகினார். 

Advertisement

இதன் காரணமாக டிம் சௌதி நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் வில்லியம்சன் கூறிய அதே காரணத்தைக் கூறி நியூசிலாந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன்னும் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். 

Also Read: T20 World Cup 2021

இத்தகவலை நியூசிலாந்து அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட் உறுதிசெய்துள்ளார். மேலும் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய லோக்கி ஃபெர்குசன், இந்திய டி20 தொடரில் விளையாடுவார் என்பதையும் உறுதிசெய்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News