பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி மதியம் நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து ரைலீ ரூஸோவ் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடவுள்ளது. நடப்பு பிஎஸ்எல் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியளின் முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.  

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - முல்தான் சுல்தான்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டஸ்
  • இடம் - முல்தான் கிரிக்கெட் மைதானம், முல்தான்
  • நேரம் -  மதியம் 2.30 மணி
Advertisement

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் முல்தான் கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. மேலும் இந்த மைதானத்தின் கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் சோஸிங் செய்த அணிகளே வெற்றியைப் பெற்றுள்ளன. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 11
  • முல்தான் சுல்தான்ஸ் - 07
  • குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - 04

உத்தேச லெவன்

முல்தான் சுல்தான்ஸ்: முகமது ரிஸ்வான் (கே), டேவிட் மலான், ரீசா ஹென்ட்ரிக்ஸ், யாசிர் கான், இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, டேவிட் வில்லி, உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, முகமது அலி, ஷாநவாஸ் தஹானி

Advertisement

குயிட்டா கிளாடியேட்டர்ஸ்: ஜேசன் ராய், சவுத் ஷகீல், கவாஜா நஃபே, ரிலீ ரூஸோவ் (கே), சர்ஃப்ராஸ் அகமது, லௌரி எவன்ஸ், அகீல் ஹொசைன், முகமது வாசிம் ஜூனியர், முகமது ஹஸ்னைன், முகமது அமீர், அப்ரார் அஹ்மத்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: முகமது ரிஸ்வான் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜேசன் ராய் (துணை கேப்டன்), ரைலீ ரூஸோவ்
  • ஆல்-ரவுண்டர்கள்: சௌத் சகீல், இஃப்திகார் அகமது, குஸ்டில் ஷா
  • பந்துவீச்சாளர்கள்: அகீல் ஹொசைன், முகமது வசீம் ஜூனியர், டேவிட் வில்லி, ஷாநவாஸ் தஹானி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News