சஞ்சு சாம்சனை ஏன் மெயின் அணியில் சேர்க்கவில்லை? - அகர்கர் பதில்!

Updated: Mon, Aug 21 2023 21:17 IST
சஞ்சு சாம்சனை ஏன் மெயின் அணியில் சேர்க்கவில்லை? - அகர்கர் பதில்! (Image Source: Google)

ஆசியக் கோப்பைத் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட இந்த அணிக்கு காயத்தில் இருந்து கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் திரும்ப வந்திருக்கிறார்கள். கே எல் ராகுல் விக்கெட் கீப்பிங் வேலையை செய்வார் என்கின்ற காரணத்தினால், இஷான் கிஷானை இரண்டாவது விக்கெட் கீப்பர் மற்றும் மூன்றாவது துவக்க மாற்று ஆட்டக்காரராக அணியில் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது.

அதே சமயத்தில் இந்த அணியில் பேக் அப் வீரராக மட்டுமே சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத இளம் 20 வயது திலக் வர்மா 17 பேர் கொண்ட முக்கிய அணியில் இடம் பெற்று இருக்கிறார். தற்பொழுது இதற்கான காரணத்தை  இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,  “திலக் வர்மாவை அணியில் எடுத்தது அவர் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் காட்டிய செயல் திறனுக்காக மட்டுமே கிடையாது. அந்தத் தொடரில் அவர் வெளிப்படுத்திய மனோபாவத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவரை அணியுடன் அழைத்துச் செல்லவும், அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கவும் இது வழி செய்கிறது.

அணிக்கு மீண்டும் ஒரு இடது கை ஆட்டக்காரர் கிடைத்திருக்கிறார் அவர் மிகவும் நம்பிக்கை கொடுப்பவராக இருக்கிறார். இப்பொழுது அணியில் 17 பேரை தேர்ந்தெடுக்கலாம் என்பதால் அவரையும் சேர்த்து இருக்கிறோம். உலகக் கோப்பைக்கு 15 பேர் எனும் பொழுது அப்பொழுதுதான் முடிவு செய்ய முடியும். இப்பொழுது கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு அவரை இணைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்கள். ஸ்ரேயாஸ் முற்றிலும் உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதே சமயத்தில் கே எல் ராகுலுக்கு காயம் இல்லை என்றாலும், அவருக்கு நிக்கில் இருக்கிறது. நாங்கள் இது சம்பந்தமாக பிசியோவிடம் அறிக்கை பெறுவோம். அவர் இரண்டு மூன்று ஆட்டங்கள் விளையாட முடியாமல் போனால் அதற்கான மாற்றை பெறுவோம். இந்த காரணத்தினால் தான் சஞ்சு சாம்சன் எங்களுடன் 18 வது வீரராக வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை