தென் ஆப்பிரிக்க - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி நேற்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி லாரா வோல்வார்ட்டின் அபாரமான சதத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 117 ரன்களையும், சுனே லூஸ் 56 ரன்களையும் சேர்த்தனர். விண்டீஸ் சார்பில் ஷாமிலியா கானல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி்யில் டோட்டின் 12, ரஷாதா வில்லியம்ஸ் 1, ஸ்டெஃபானி டெய்லர் 13, ஹீலி மேத்யூஸ் 15 என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் கிசியா நைட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.
இதனால் 44.4 ஓவர்களிலேயே விண்டீஸ் மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஷப்னிம் இஸ்மைல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி, ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.