எல் எல் சி 2022: தில்சன், தரங்கா அதிரடியில் ஆசிய லையன்ஸ் வெற்றி!

Updated: Sat, Jan 22 2022 13:06 IST
LLC 2022: Asia lions beat World Giants by 6 wickets (Image Source: Google)

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உலக ஜெண்ட்ஸ் அணி, ஆசிய லையன்ஸ் அணியை எதிர்கொண்டது .

இதில் முதலில் பேட்டிங் செய்த ஜெயண்ட்ஸ் அணி கெவின் ஓ பிரையனின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கெவின் ஓ பிரையன் 95 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய லையன்ஸ் அணியில் காம்ரன் அக்மல் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தில்சன் - உபுல் தரங்கா இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதனால் 19.2 ஓவர்களில் லையன்ஸ் அணி இலக்கை அடைந்தது. இதன்மூலம் லையன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உலக ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை