எல்எல்சி 2023: ஆம்லா, காலிஸ் அதிரடியில் உலக ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!

Updated: Fri, Mar 17 2023 10:50 IST
LLC Masters: Amla, Kallis Fifties Lead World Giants To Final With Win Over Asia Lions (Image Source: Google)

லெஜண்ட்ஸ் லீக் 2023 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 6ஆவது லீக் போட்டியில் உலக ஜெய்ண்ட்ஸ், ஆசிய லையன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆசிய லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய உலக ஜெய்ண்ட்ஸ் அணியில் கிறிஸ் கெய்ல் 2 (5), ஷேன் வாட்சன் 6 (11) ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஹசிம் அம்லா - ஜாக் காலிஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 68 ரன்களில் ஹாசிம் அம்லா ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜாக் காலிஸ் 56 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது. 

இதனைத் தொடர்ந்து இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆசிய லையன்ஸ் அணியில் உபுல் தரங்கா ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த திசாரா பெரேரா 12 ரன்களிலும், முகமது ஹபீஸ் 13 ரன்களிலும், மிஸ்பா உல் ஹக் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த திலகரத்னே தில்சன் 37 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். பின்னர் வந்த கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி 26 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

இதனால் 19.1 ஓவர்களில் ஆசிய லையன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உலக ஜெயண்ட்ஸ் தரப்பில் கிறிஸ் பொஃபு , டினோ பெஸ்ட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் உலக ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆசிய லையன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை