எல்எல்சி 2023: இந்திய மகாராஜாஸ் அதிர்ச்சி தோல்வி!

Updated: Sun, Mar 19 2023 12:27 IST
LLC Masters: Asia Lions Roar Past India Maharajas To Take On World Giants In Final (Image Source: Google)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்றே ஓய்வை அறித்த சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற  எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இந்தியா மகாராஜாஸ் - ஆசிய லையன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆசிய லையன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.  

அதன்படி களமிறங்கிய ஆசிய லையன்ஸ் அணியில் உபுல் தரங்கா - தில்சன் இணை அதிரடியாக விளையாடி தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். இதில் தில்சன் 37 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய உபுல் தரங்கா அரைசதம் கடந்த அடுத்த பந்திலேயே 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

பின்னர்  வந்த முகமது ஹபீஸ் 38, ஆஸ்கர் ஆஃப்கான் 34, திசாரா பெரேரா 24 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் ஆசிய லையன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தனர். மகாராஜாஸ் அணி தரப்பில் ஸ்டூவர்ட் பின்னி, பிரக்யான் ஓஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மகாராஜாஸுக்கு வழக்கம் போல் ராபின் உத்தப்பா - கௌதம் கம்பீர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் உத்தப்பா 15 ரன்களில் ஆட்டமிழக்க, கௌதம் கம்பீர் 32 ரன்களுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் வந்த முகமது கைப் 14, சுரேஷ் ரெய்னா 18 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய யூசுப் பதான், இர்ஃபான் பதான், மன்விந்தர் பிஸ்லா, ஸ்டூவர்ட் பின்னி என அனைவரும் ஒற்றையிலக்க ரன்களோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 16.4 ஓவர்களிலேயே மகாராஜாஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதன்மூலம் ஆசிய லையன்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகாராஜாஸை வீழ்த்தில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை