எல்எல்சி 2023: உலக ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!

Updated: Tue, Mar 14 2023 10:49 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்றே ஓய்வை அறித்த சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்திய ஆசிய லையன்ஸ் அணியை எதிர்த்து உலக ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. 

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வு தாமதமானது. அதன்பின் ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய ஆசிய லையன்ஸ் அணியில் உபுல் தரங்கா ஒரு ரன்னிலும், திசாரா பெரேரா 10 ரன்களிலும், கேப்டன் அஃப்ரிடி 2 ரன்களிலும் என அடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த தில்சன் - மிஸ்பா உல் ஹக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தில்சன் 32 ரன்களிலும், மிஸ்பா உல் ஹக் 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆசிய லையன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய உலக ஜெயண்ட்ஸ் அணியில் லிண்டன் சிம்மன்ஸ் - கிறிஸ் கெயில் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். இதில் சிம்மன்ஸ் 14 ரன்களிலும், கிறிஸ் கெயில் 23 ரன்களோடும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் களமிறங்கிய ஷேன் வாட்சன், ஆரோன் ஃபிஞ்ச், ரிச்சர்ட் பாவெல் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் உலக ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. 

இதன்மூலம் ஆசிய லையன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் உலக ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி தொடரின் 2ஆவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ஆசிய லையன்ஸ் அணி தரப்பில் ஷாஹித் அஃப்ரிடி, அப்துல் ரஸாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை