ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வெல்லும் - சாம் கரண்!

Updated: Wed, Oct 06 2021 15:35 IST
Loved My Stay at CSK, I am Sure They Can Lift the Trophy: Sam Curran (Image Source: Google)

ஐபிஎல் 2021 போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். 

மேலும் இன்னும் சில தினங்களில் அவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லவுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவரது சகோதரர் டாம் கரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிஎஸ்கே அணியின் இணையத்தளத்துக்கு பேட்டியளித்த சாம் கரண், “ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பைப் போட்டிகளில் இருந்து விலகியது வேதனையளிக்கிறது. சென்னை அணியில் எனக்கு அற்புதமான தருணங்கள் அமைந்தன. வீரர்கள் அருமையாக விளையாடி வருகிறார்கள். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அடுத்த சில நாள்களில் நான் எங்கிருந்தாலும் சிஎஸ்கே அணிக்கு எனது ஆதரவை அளிக்கப் போகிறேன். தொடர்ந்து நன்கு விளையாடி ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி கைப்பற்றும். எனக்கு ஆதரவளித்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் முன்பு நான் மீண்டும் விளையாடுவதற்கு நீண்ட நாள் ஆகாது. இன்னும் கூடுதல் பலத்துடன் அணிக்குத் திரும்புவேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை