இலங்கையின் டி20 லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் - தம்புலா ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

Advertisement

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஷங்கா - அண்ட்ரே ஃபிளெட்சர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 26 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ஃபிளெட்சர் 44 ரன்களில் ஆட்டமிழந்து வாய்ப்பை தவறவிட்டார்.

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் - அஷேன் பண்டார இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதில் கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடந்த கையோடு 58 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஷேன் பண்டாரா 42 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தம்புலா ஆரா அணியில் ஷெவான் டேனியல் 9 ரன்னிலும், லசித் 13 ரன்களிலும், ஜோர்டன் காக்ஸ் ஒரு ரன்னோடும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பனுகா ராஜபக்ஷாவும் 18 ரன்களோடு பெவிலியன் திரும்ப, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரமெஷ் மெண்டிஸ், தசுன் ஷனகா, சிக்கந்தர் ரஸா ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனால் 14.2 ஓவர்களிலேயே தம்புலா ஆரா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது. கண்டி ஃபால்கன்ஸ் அணி தரப்பில் கார்லோஸ் பிராத்வையிட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

Advertisement

இதன்மூலம் கண்டி ஃபால்கன்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் தம்புலா ஆரா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News