Advertisement

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து, நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்த நிலையில் லக்னோ அணி இன்றைய போட்டியில் விளையாடவுள்ளது. அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் குயின்டன் டி காக், கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோருடன் இளம் வீரர் ஆயூஷ் பதோனியும் கடந்த சில போட்டியில் சிறப்பாக விளையாடி வருவது அணிக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பந்து வீச்சை பொறுத்த வரையில் காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் விளையாடாமல் இருந்த அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ், இன்றைய போட்டியில் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது அது லக்னோ அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. நடப்பு சீசனில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள மயங்க் யாதவ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு துணையாக மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய், ஷமார் ஜோசப் போன்ற வீரர்கள் அணியில் இருப்பது நிச்சயம் அந்த அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, அர்ஷத் கான், மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய், ஷமர் ஜோசப், யாஷ் தாக்கூர்/ மயங்க் யாதவ்.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் ரச்சின் ரவீந்திரா, அஜிங்கிய ரஹானே, டேரில் மிட்செல் ஆகியோரிடம் இருந்து தொடர்ச்சியான செயல்பாடு இல்லாதது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே ஆகியோருடன் மகேந்திர சிங் தோனி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்து வருவதௌ அணிக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா சுழற்பந்துவீச்சில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வேகப்பந்துவீச்சில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் மதீஷா பதிரனா இருவரும் அணியின் சாம்பியன் பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகின்றனர். மேலும் காயத்தால் கடந்த இருண்டு போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த வரும் தீபக் சஹாரின் நிலை குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. இதனால் இன்றைய ஆட்டத்திலும் ஷர்தூல் தாக்கூர் விளையாடவே அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

சிஎஸ்கே உத்தேச லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, டெரில் மிட்செல், எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதிஷா பதிரனா

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News