Lucknow Super Giants vs Mumbai Indians Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியையும், இரண்டு தோல்வியையும் பதிவுசெய்துள்ளன. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

LSG vs MI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் -   ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - ஏப்ரல் 04, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

LSG vs MI Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 16 போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 09 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 4 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 5 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 151 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 199 ரன்கள் உள்ளது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால், பேட்டர்களுக்கு பெரும் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

LSG vs MI: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

LSG vs MI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 06
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 05
  • மும்பை இந்தியன்ஸ் - 01

LSG vs MI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ரியான் ரிக்கல்டன்
  • பேட்ஸ்மேன்கள் - மிட்செல் மார்ஷ், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), ஆயுஷ் பதோனி, திலக் வர்மா
  • ஆல்ரவுண்டர்கள் - ஹார்டிக் பாண்டியா, வில் ஜாக்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - டிரென்ட் போல்ட், ஷர்துல் தாக்கூர், அஷ்வினி குமார்.
Advertisement

Lucknow Super Giants vs Mumbai Indians Probable Playing XI

Lucknow Super Giants Probable Playing XI: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், திக்வேஷ் சிங், ரவி பிஷ்னோய்.

இம்பேக்ட் வீரர் - எம் சித்தார்த்.

Advertisement

Mumbai Indians Probable Playing XI: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், அஷ்வினி குமார்.

இம்பேக்ட் வீரர் - விக்னேஷ் புதூர்.

LSG vs MI Dream11 Prediction, LSG vs MI, LSG vs MI Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, LSG vs MI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Lucknow Super Giants vs Mumbai Indians

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News