ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி விளையாடிய முதல் போட்டியிலேயே மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் போட்டியில் வென்றாலும், இரண்டாவது போட்டியில் உதைவாங்கியது. இதனல் இரு அணிகளும் தோல்வியிலிருந்து மீண்டுவர போராடும் என்பதாலும், இரு அணியிலும் பல நட்சத்திர வீரர்கள் இருப்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் -  இரவு 7.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த சீசனின் முதல் போட்டி இதுவாகும். மேலும் இங்கு இரண்டு வகையான பிட்சுகள் உள்ளது. ஆனாலும் பெரும்பாலான போட்டிகளில் சுழற்பந்துவீச்சுக்கு இந்த மைதானம் சாதகமானதாக இருந்திருக்கிறது. மேலும் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரியானது 151 ரன்களாக உள்ளது. இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்யலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 02
  • பஞ்சாப் கிங்ஸ் -  01

நேரலை 

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், நவீன் உல் ஹக், யாஷ் தாக்கூர்.

Advertisement

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரண், ஜிதேஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஜிதேஷ் சர்மா
  • பேட்ஸ்மேன் - ஷிகர் தவான்
  • ஆல்ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரண் (துணை கேப்டன்), க்ருனால் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய், ஹர்பிரீத் ப்ரார்.

LSG vs PBKS IPL 2024 Dream11 Prediction, Today Match LSG vs PBKS, LSG vs PBKS Dream11 Team, Fantasy Cricket Tips, LSG vs PBKS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Lucknow Super Giants vs Punjab Kings

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News