Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ரஜத் படிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆர்சிபி அணி ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியாது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த வெற்றியானது மிகவும் அவசியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

LSG vs RCB Match Details

  • மோதும் அணிகள்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் -  ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - மே 09, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Ekana Cricket Stadium, Lucknow Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 40ஆவது போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 09 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 4 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 5 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 151 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 199 ரன்கள் உள்ளது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதால், பேட்டர்களுக்கு பெரும் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

LSG vs RCB: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

LSG vs RCB Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 05
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 03
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 02

LSG vs RCB Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், ஆயுஷ் பதோனி, மிட்செல் மார்ஷ், டிம் டேவிட்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ராம் (துணை கேப்டன்), ரொமாரியோ ஷெப்பர்ட்
  • பந்துவீச்சாளர்கள் – புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி/ஜோஷ் ஹேசில்வுட், திக்வேஷ் ரதி.
Advertisement

LSG vs RCB Predicted Playing 11

Lucknow Super Giants XI : ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, மயங்க் யாதவ்.

இம்பேக்ட் வீரர் - ஆகாஷ் சிங்.

Advertisement

Royal Challengers Bengaluru XI : ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்.

இம்பாக்ட் வீரர் – லுங்கி நிகிடி/ஜோஷ் ஹேசில்வுட்.

LSG vs RCB Dream11 Prediction, LSG vs RCB, LSG vs RCB Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, LSG vs RCB Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News