ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன.

Advertisement

இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாப் 2 இடத்தை உறுதிசெய்துள்ள நிலையில், ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் ஆர்சிபி அணி வெற்றிபெற்று முதலிரண்டு இடங்களை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்வியைச் சந்தித்த கையோடு, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. இதனால் எஞ்சிய போட்டிகளில் அந்த அணி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அணியின் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம் ஆகியோர் அணியின் நம்பிக்கையாக உள்ளனர்.

அவர்களுடன் ரிஷப் பந்த், டேவிட் மில்லர், ஆயூஷ் பதோனி ஆகியோரும் சோபிக்கும் பட்சத்தில் அது அணிக்கு கைகொடுக்கும். அதேசமயம், பந்துவீச்சை பொறுத்தவரையில் வில்லியம் ஓரூர்க், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ஆகாஷ் தீப் உள்ளிட்டோரும் கடந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் இந்த போட்டியிலும் லக்னோ அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் முடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்.), ஆயுஷ் படோனி, அப்துல் சமத், திக்வேஷ் ரதி, ஷாபாஸ் அகமது, ஆகாஷ் தீப், அவேஷ் கான், வில்லியம் ஓரூர்க்

Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் அந்த அணி வெற்றிபெறும் பட்சத்தில் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை பெறும் என்பதால் கூடுதல் உத்வேகத்துடன் அந்த அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. 

அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படும் நிலையில் மற்ற வீரர்களும் சோபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபக்கம் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், குர்னால் பாண்டியா, சுயாஷ் சர்ம ஆகியோருடன் ஜோஷ் ஜேசில்வுட், பிளசிங் முஸரபானி ஆகியோரும் அணியில் இணைந்துள்ளது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், பிளெசிங் முஸரபானி, யாஷ் தயாள்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் – 5
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 02
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 02

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்- ரிஷப் பந்த், பில் சால்ட், நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ரஜத் படிதார், மிட்செல் மார்ஷ்
  • ஆல்ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம் (துணை கேப்டன்), ரொமாரியோ ஷெப்பர்ட், குர்னால் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள்- பாட் கம்மின்ஸ், யாஷ் தயாள்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News