ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் வலிமைமிக்க இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகளைச் சந்தித்து 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேஎல் ராகுல், குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடிய வகையில் தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
லக்னோ ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைக்கொடுக்கும் என்பதால் குர்னால் பாண்டியா, ரவி பிஸ்னாய் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள். அதேபோல், காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடமல் இருந்த இளம் வேகபந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இந்த போட்டியில் விளையாட வாய்புள்ளதாக தெரிகிறது, இது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கே), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டுவருவதுடன், இந்த ஐபிஎல் தொடரின் மிகவும் வலிமை வாய்ந்த அணியாகவும் வலம் வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
அணியின் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மன் பாவெல் உள்ளிட்ட வீரர்கள் உட்சபட்ச ஃபார்மில் தொடர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சதமடித்து தங்கள் ஃபார்மை மீட்டுள்ளனர். பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சஹால், ஆவேஷ் கான் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்..