ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இருந்து விலகும் கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை அணியின் அலோசகராக நியமித்துள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வாம அறிவித்தது.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தக்கவைக்கும் வீரர்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்தவகையில், கடந்த மூன்று சீசன்களாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த் கேஎல் ராகுலை அந்த அணி நீர்வாகம் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணியை சிறப்பாக வழிநடத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற கேஎல் ராகுல், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தனிப்பட்ட மைல் கல்லிற்காக விளையாடி அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். ஏனெனில் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தவறியது.
அதுமட்டுமில்லால் லீக் போட்டியின் போது அணியின் கேப்டன் கேஎல் ராகுலை அந்த அணியின் உரிமையாளர் அனைவரும் பார்க்கும் வண்ணம் தரைகுறைவாக நடத்தியது என பல்வேறு சர்ச்சைகள் உருவானது. இதனால் இந்த தொடரின் பாதியிலேயே கேஎல் ராகுல் அணியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ற வகையில் தற்போது கேஎல் ராகுல் லக்னோ அணியில் இருந்து விலகி, ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலாத்திற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது மயங்க் யாதவ், நிக்கோலஸ் பூரான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறுப்படுகிறது. அவர்களுடன், ஆயுஷ் பதோனி மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரையும் அன் கேப்ட் வீரராக லக்னோ அணி தேர்வுசெய்ய முடிவுசெய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கேஎல் ராகுல் அந்த அணியில் இருந்து விடுவிடுக்கப்படுகிறார் என்ற் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.