Lungi Ngidi Record: நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் லுங்கி இங்கிடி ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

Advertisement

ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டிம் ராபின்சன் 75 ரன்களையும், பெவான் ஜேக்கப்ஸ் 44 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் 35 ரன்களையும், ஜார்ஜ் லிண்டே 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரண்மாக அந்த அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க  அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. 

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி சிறப்பு சாதனை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் இங்கிடி நியூசிலாந்தின் டிம் செஃபெர்டின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 65ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 

முன்னதாக அந்த அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் 47 டி20 போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது லுங்கி இங்கிடி 45 போட்டிகளில் 65 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்ஸி 89 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், காகிசோ ரபாடா 71 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

  • தப்ரைஸ் ஷம்சி - 70 போட்டிகளில் 89 விக்கெட்டுகள்
  • ககிசோ ரபாடா - 65 போட்டிகளில் 71 விக்கெட்டுகள்
  • லுங்கி இங்கிடி- 45 போட்டிகளில் 65 விக்கெட்டுகள்
  • டேல் ஸ்டெய்ன் - 47 போட்டிகளில் 64 விக்கெட்டுகள்
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News