WI vs SA: டேல் ஸ்டெயின் சாதனையை முறியடிப்பாரா லுங்கி இங்கிடி!

Updated: Fri, Aug 23 2024 16:28 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வென்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி மேற்கொண்டு 3 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெய்னின் சாதனையை முறியடிப்பதுடன், காகிசோ ரபாடாவின் சாதனையையும் சமன்செய்யவுள்ளார். 

அந்தவகையில் தென் அப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அந்த அணிக்காக 47 டி20 போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லுங்கி என்கிடி இதுவரை 42 டி20 போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை படைப்பார். 

மேற்கொண்டு, லுங்கி இங்கிடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடாவின் சாதனையையும் சாதனையையும் சமன்செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்காக 11 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை ககிசோ ரபாடா கைப்பற்றி அசத்தியுள்ளார்.  

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதேசமயம் லுங்கி இங்கிடி 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுககைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் தொடரில் அவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் வெய்ன் பார்னெல், டேவிட் விஜே, தப்ரைஸ் ஷம்சி ஆகியோரை பின்னுக்குத்தள்ளி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது தென் ஆப்பிரிக்க வீரர் எனும் காகிசோ ரபாடாவின் சாதனையை லுங்கி இங்கிடி சமன்செய்து அசத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை