மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடியது. இதில் மூன்று வடிவிலான தொடரிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியது.
இதையடுத்து இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதன்படி நடப்பு மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 20ஆம் தேதியும், டெஸ்ட் தொடரானது ஜனவரி 30ஆம் தேதியும் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டடு. ஹீதர் நைட் தலைமையிலான இந்த அணியில் நாட் ஸ்கைவர்-பிரண்ட், சோஃபி எக்லெஸ்டோன், மையா பௌச்சியர் மற்றும் லாரன் பெல் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.
இதுதவிர்த்து ஆல்-ரவுண்டர் ஃப்ரேயா கெம்ப் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் லின்ஸி ஸ்மித் ஆகிய அறிமுக வீராங்கனைகள் இங்கிலாந்து மகளிர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த மற்ற வீராங்கனைகள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹீதர் நைட் (கே), டாமி பியூமண்ட், லாரன் பெல், மையா பௌச்சர், ஆலிஸ் கேப்ஸி, கேட் கிராஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், சாரா க்ளென், ஏமி ஜோன்ஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட், டேனியல் வையட்-ஹாட்ஜ்
இங்கிலாந்து டி20 அணி: ஹீதர் நைட் (கே), லாரன் பெல், மையா பௌச்சர், ஆலிஸ் கேப்ஸி, சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், டேனியல் கிப்சன், சாரா க்ளென், பெஸ் ஹீத், ஏமி ஜோன்ஸ், ஃப்ரேயா கெம்ப், லின்ஸி ஸ்மித், நாட் ஸ்கைவர்-பிரண்ட், டேனியல் வையட்-ஹாட்ஜ்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து டெஸ்ட் அணி: ஹீதர் நைட் (கே), டாமி பியூமண்ட், லாரன் பெல், மையா பௌச்சர், கேட் கிராஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், பெஸ் ஹீத், ஆமி ஜோன்ஸ், ரியானா மெக்டொனால்ட்-கே, நாட் ஸ்கைவர்-பிரண்ட், டேனியல் வையட்-ஹாட்ஜ்