ஸ்ரேயாஸின் பலவீனம் இதுதான் - மதன் லால்!

Updated: Tue, Jun 21 2022 17:30 IST
Madan Lal urges Shreyas Iyer to work on issues against pace before T20 World Cup (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துவிட்டது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் இறுதி அணியை சமர்பிக்க வேண்டும் என்பதால், அணித்தேர்வுக்கான பணிகள் சூடுபிடித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் நிச்சயம் இடம்பெறுவார்கள். இவர்களின் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரும் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். இந்திய டி20 அணியில் 4வது இடத்திற்கு பொருத்தமாக இருப்பதால் இவரை டிராவிட் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மிகப்பெரிய பலவீனம் இருப்பதாக முன்னாள் வீரர் மதன் லால் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரருக்கு பலவீனம் இருந்தால், எதிரணி நிச்சயம் அதையே தான் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். அந்தவகையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பால்களை சந்திப்பது ஒரு பலவீனமாக உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் 100 ரன்களே அடித்தாலும் சரி, ஆஸ்திரேலிய பவுலர்கள் கருணையே இல்லாமல் தொடர்ந்து ஷார்ட் பந்துகளை வீசுவார்கள். தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் மூலம் பலவீனத்தை சுலபமாக கண்டறிகின்றனர். எனவே ஸ்ரேயாஸ் ஐயர் தனது ஷார்ட் பாலை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

ஸ்ரேயாஸ் ஐயரின் பலவீனம் முதன் முதலில் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் தெரியவந்தது. அதில் அவர் 0, 12, 2, 38, 19 என சொதப்பினார். 2022 ஐபிஎல் தொடரில் கூட ஸ்ரேயாஸ் ஐயர் 12 இன்னிங்ஸ்களில் 3 முறை ஷார்ட் பால்களில் தான் அவுட்டாகியிருந்தார்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை