சுனில் நரைனை க்ளீன் போல்டாக்கிய மஹீஷ் தீக்ஷனா - வைரலாகும் காணோளி!
வெஸ்ட் இண்டீஸின் டி20 லீக் தொடரான கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராயும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பூரன் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 91 ரன்களைச் சேர்த்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் பூரன் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை கரணமாக இப்போட்டி தடைபட்டது. இதனால் நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்த நிலையில் இன்னிங்ஸ் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் தமதமாக தொடங்கிய இப்போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு 5 ஓவர்களில் 60 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணியில் டி காக் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசியதுடன் 17 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 4.2 ஓவர்களில் இலககி எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ராயல்ஸ் அணி இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், நைட் ரைடர்ஸ் அணியானது எலிமினேட்டர் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் அணியின் வெற்றிக்கு உதவியதன் காரணமாக ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் ராயல்ஸ் அணி பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் சுனில் நரைனை க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இன்னிங்ஸின் முதல் ஓவரை தீக்ஷனா வீச அந்த ஓவரின் மூன்றாவது பந்த சுனில் நரைன் அடிக்க முயன்று தவறவிட்டதுடன், க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் தீக்ஷனா பந்துவீச்சில் நைரன் க்ளீன் போல்டானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.