இன்று தொடங்கிய ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், கடந்த முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்ற நியூசிலாந்தும் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடி வருகிறார்கள். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 282 ரன்களுக்கு மிகச் சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து மடக்கி இருக்கிறது. அதே சமயத்தில் முதல் 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தையும் பெற்றிருக்கிறது.

Advertisement

இந்த போட்டிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. எனவே நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டிக்குதான் மைதானம் முழுமையாக நிரம்பும் என்கின்ற நிலை இருக்க, இந்தியா விளையாடும் போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8ஆன் தேதி விளையாட இருக்கிறது. தற்போது இரு அணி வீரர்களும் சென்னையில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisement

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் வேகப்பந்துவீச்சுக்கு மூன்று ஆல் ரவுண்டர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சுக்கு ஒரு ஆல் ரவுண்டர் என மொத்தம் நான்கு ஆல் ரவுண்டர்கள் விளையாடும் அணியிலேயே இடம் பிடிக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கிறார்கள். அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் இரண்டு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனல்ட், “மார்கஸ் ஸ்டொய்னிஸ் நிச்சயமாக எங்களுடைய திட்டத்தில் இருந்து விலக்கப்படவில்லை. இந்த கட்டத்தில் அவருக்கு லேசான தொடை வலி உள்ளது, அதனால்தான் அவர் பயிற்சி ஆட்டங்களைத் தவறவிட்டார், மேலும் அவர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தொடுவார்.

மேலும் அவரை பயிற்சி போட்டிகளில் அவரை களம் இறக்கி நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இன்று எங்களுக்கு ஒரு முக்கிய பயிற்சி அமர்வு இருக்கிறது. மேலும் மற்றொரு பயிற்சி அமர்வு இருக்கிறது. அதில் அவர் நிச்சயம் கலந்து கொள்வார். அதிலிருந்து அவர் போட்டியில் விளையாடும் அளவுக்கு தகுதியாக இருக்கிறாரா? என்று பார்க்கப்படும்” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News