AUS vs ZIM: முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!

Updated: Sat, Aug 27 2022 13:42 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி இப்போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது.

அதன்படி ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் பிளேயிங் லெவனில் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுசாக்னேவுக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக அலெக்ஸ் கேரி 4ஆம் இடத்தில் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல் என அதிரடி பேட்ஸ்மேன்களும், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், ஆடம் ஸாம்பா போன்ற முன்னணி பந்துவீச்சாளர்களுக்கும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: ஆரோன் பின்ச் (கே), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

ஜிம்பாப்வே அணி: ரியான் பர்ல், ரெஜிஸ் சாகப்வா (கே), பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வனாஷே கைடானோ, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதவெரே,தடிவானாஷே மருமணி, டோனி முனியோங்கா, ஆசிர்வாதம் முசரபானி, ரிச்சர்ட் ங்கராவா, விக்டர் நியுச்சி, சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை