உலகக்கோப்பை தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்; ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Thu, Nov 02 2023 12:05 IST
Image Source: Google

ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 5ஆம் தொடங்கி விறுவிறுப்பாக நடபெற்று வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 6 போட்டிகளில் 4இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் வருகிற நவம்பர் 4ஆம் தேதி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல் கடந்த திங்கள்கிழமை கோல்ஃப் வண்டியின் பின்புறத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.

இதனால் அவருக்கு மூளையதிர்ச்சி மற்றும் முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் விலகினார். 35 வயதான மேக்ஸ்வெல், நெதர்லாந்து அணிக்கு எதிராக 40 பந்துகளில் சதம் விளாசி உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியாவின் மற்றொரு வீரரான ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விலகி உள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தொடர் தோல்வியில் இருந்து ஆஸ்திரேலியா மீண்டு வருவதற்கு பக்க பலமாக அடித்தளமிட்ட வீரர்களில் ஒருவர் மிட்செல் மார்ஷ். 

அவர் தற்போது விலகி இருப்பது ஆஸ்திரேலியா ரசிகர்கள இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் (X) தளத்தில் கூறியிருப்பதாவது "உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி உள்ளார். இதனால் மற்றொரு முக்கிய ஆல்ரவுண்டரை இழந்து ஆஸ்திரேலியா பாதிக்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்கத்தில் தோல்வியை சந்தித்து வந்த ஆஸ்திரேலியா அணி நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியது. அரை இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு ஆல் ரவுண்டர்களான மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கபடுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை