PAK vs NZ: காயம் காரணமாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

Updated: Sat, Jan 07 2023 18:49 IST
Image Source: Google

சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 18 அன்றும் டி20 தொடர் ஜனவரி 27 அன்றும் தொடங்குகின்றன.

இந்தியா, பாகிஸ்தானில் ஒருநாள் தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன் முதலில் விலகினார். தற்போது பிரபல வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றியும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்டின் கடைசி நாளில் ஹென்றியின் வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆடம் மில்ன் விலகியபோது அவருக்குப் பதிலாக பிளைர் டிக்னர் தேர்வானார். தற்போது ஹென்றிக்குப் பதிலாக விளையாடவுள்ள வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் விளையாடவுள்ள ஒருநாள் தொடருக்கு நியூசிலாந்தின் கேப்டனாக கேன் வில்லியம்சனும் இந்தியாவில் டாம் லேதமும் கேப்டன்களாகச் செயல்படவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கே),டாம் லதம், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மன், கான்வே, ஜகோப் டுஃபி, லாகி ஃபெர்குசன், பிளைர் டிக்னர், டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், கிளென் பிளிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை