பாகிஸ்தான் டி20 தொடரில் மேட் ஹென்றிக்கு ஓய்வு - நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். அதேசமயம் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து அணி இத்தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான டி20 அணியை இன்று அறிவித்துள்ளது. இதில் கடந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது காயத்தை சந்தித்த வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றிக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் போது அவர் காயத்தை சந்தித்தார்.
அதன்பின் காயம் காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து விலகிய அவருக்கும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளிலும் ஓய்வளிக்கப்பட்டு மாற்று வீரராக ஸகார் ஃபால்க்ஸ் நியூசிலாந்து டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மேட் ஹென்றி தற்போது காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதன் காரணமாக கடைசி இரண்டு டி20 போட்டிகளில் இருந்தும் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து டி20 அணி: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்செல் ஹெய், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷாம், வில்லியம் ஓ'ரூர்க், டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செய்ஃபெர்ட், இஷ் சோதி