IND vs AUS: இந்திய டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மேத்யூ வேட் கேப்டன்!

Updated: Sat, Oct 28 2023 10:59 IST
IND vs AUS: இந்திய டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மேத்யூ வேட் கேப்டன்! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்கிய இத்தொடரில் இதுவரை 27 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய உள்ளிட்ட அணிகள் புள்ளிப்பட்டியளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர்.

இதனால் பெரும்பாலும் இந்த நான்கு அணிகளே அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இத்தொடரின் அரையிறுதிப்போட்டிகள் நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளிலும், இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கெதிராக விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு அனுபவ வீரரான மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆடம் ஸாம்பா, தன்வீர் சங்கா உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

அதன் காரணமாக டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரானது நவம்பர் 23ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

ஆஸ்திரேலிய டி20 அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் அட்டவணை

  • முதல் டி20 - நவம்பர் 23 -விசாகப்பட்டினம்
  • இரண்டாவது டி20 - நவம்பர் 26 - திருவனந்தபுரம்
  • மூன்றாவது டி20 - நவம்பர் 28 - கௌகாத்தி
  • நான்காவது டி20 - டிசம்பர் 1 - நாக்பூர்
  • ஐந்தாவது T20I - டிசம்பர் 3 - ஹைதராபாத்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை