ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி அலிசா ஹீலி மற்றும் எல்லிஸ் பேர்ரி ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பெத் மூனி 40 ரன்களையும், எல்லிஸ் பெர்ரி 30 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அமெலியா கெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக அந்த அணியில் அதிகபட்சமாகவே அமெலியா கெர் 29 ரன்களையும், சூஸி பேட்ஸ் 20 ரன்களையும் சேர்த்தது தான். மேற்கொண்டு நட்சத்திர வீராங்கனைகள் கேப்டன் சோஃபி டிவைன், மேடி கிரீன், இசபெல்லா காஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.  

இறுதியில் நியூசிலாந்து மகளிர் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 88 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேகன் ஸ்காட் மற்றும் அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சோஃபி மொலினக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேகன் ஸ்காட் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி, நேற்றைய போட்டியில் 3.3 ஓவர்களை வீசிய அவர், 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்ததுடன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் மிக குறைந்த ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்து சாதனை படைத்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

மேற்கொண்டு இப்போட்டியில் மேகன் ஸ்காட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், டி20 உலகக் கோப்பையில் 46 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக தென்ஆப்பிரிக்காவின் ஷப்னின் இஸ்மாயில் 43 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது அதனை மேகன் ஸ்காட் முறியடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News