ஐசிசி மாதாந்திர விருதுகள்: முஸரபானி, மெஹிதி ஹசன், பென் சீயர்ஸ் ஆகியோர் பரிந்துரை!
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது,
அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த வங்கதேசம் - ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர், நியூசிலாந்து - பாகிஸ்தான் தொடர்களில் சிறப்பாக செயல்பாட்ட வீரர்கள் இந்த பரிந்துரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதான்படி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முஸரபானி ஐசிசி சிறந்த வீரர் விருதுகான பரிந்துரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இத்தொடரில் அவர் இரண்டு போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரைத்தவிர்த்து இத்தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயால்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற வங்கதேச ஆல் ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதில் அவர் இரண்டாவது டெஸ்டில் சதமடித்து அசத்தியதுடன் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு ஏப்ரல் தொடக்கத்தில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமான பந்துவீச்சின் மூலம் நியூசிலாந்துக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பென் சீயர்ஸும் இந்த பரிந்துரை பட்டியலில் இணைந்துள்ளார். அதிலும் குறிப்பாக இத்தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் பென் சீயர்ஸ் அபாரமாக பந்துவீசி தொடர்ச்சியாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
அதேபோல் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் ஸ்காட்லாந்து மகளிர் அணி கேப்டன் கேத்ரின் பிரைஸ், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹீலி மேத்யூஸ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நடந்து முடிந்த ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இவர்கள் மூவரும் பரிந்துரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.