ஐசிசி மாதாந்திர விருதுகள்: மார்ச் மாதத்திற்கான விருதை வென்றனர் மெண்டிஸ் & பௌச்சர்!

Updated: Mon, Apr 08 2024 19:46 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. 

அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் அதிர், இலங்கை அணியை சேர்ந்த ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்ரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார். 

இலங்கை அணியைச் சேர்ந்த அல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தியதோடு, பந்துவீச்சிலும் குறிப்பிட தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அத்துடன் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தொடர்நாயகன் விருதையும் வென்றார். இதன் மூலம் கமிந்து மெண்டிஸ் ஐசிசியின் மாதாந்திர விருதை வென்றுள்ளார். 

அதேபோல், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆல் ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னர், இங்கிலாந்து மகளிர் அணி பேட்ஸ்மேனான மையா பௌச்சர் மற்றும் நியூசிலாந்து ஆல் ரவுண்டரான அமெலியா கெர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் இங்கிலாந்து அணியின் மையா பௌச்சர் மார்ச் மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை