உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 34.5 ஒவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Advertisement

இதன் மூலமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆடிய 6 போட்டிகளில் 6யிலும் வென்று அசத்தியுள்ளது. அதேபோல் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. இதனால் முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்கா அணி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணி 5வது தோல்வியை சந்தித்து 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன்படி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய குல்தீப் யாதவ், “சொந்த ஊரில் விளையாடுவது சிறந்த அனுபவம். ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைத்தது. அதே நேரத்தில் பனிப்பொழிவும் இருந்தது. பந்தை சரியான லெந்தில் வீச முயற்சித்தோம். நான் சிறப்பாகவே செயல்பட்டேன். அதைவிட அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இந்த ஆடுகளத்தில் 230 ரன்கள் என்ற இலக்கை டிஃபென்ட் செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும். கேப்டன் ரோஹித் அபாரமாக பேட் செய்திருந்தார். பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்த விரும்பினோம். அதை பும்ரா மற்றும் ஷமி செய்தனர். விரைந்து 4 விக்கெட்களை இங்கிலாந்து இழந்தது. 

அந்த அழுத்தத்தை அவர்கள் உணரும் விதமாக சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்படுவது அவசியமானது. நாங்கள் பேட்டிங் பயிற்சியும் மேற்கொள்கிறோம். நாங்கள் ரெகுலர் பேட்ஸ்மேன்கள் கிடையாது. ஆனாலும் இறுதி கட்டத்தில் 15-20 ரன்கள் எடுக்கலாம் என்பதற்காக இந்தப் பயிற்சி. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓரளவுக்கு எங்களால் பங்களிப்பு தர முடிந்தது. முதல் சுற்றில் மேலும் 3 போட்டிகள் உள்ளன. அதன்பிறகே அரையிறுதியில் நாங்கள் யாரை எதிர்கொள்கிறோம் என்பது தெரியும்” என தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News