பந்தை ஸ்விங் செய்வது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் கிடையாது - முகமது ஷமி

Updated: Fri, Nov 03 2023 11:59 IST
பந்தை ஸ்விங் செய்வது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் கிடையாது - முகமது ஷமி (Image Source: Google)

உலகக்கோப்பை தொடரின் 33ஆவது லீக் போட்டியில் இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் விளாசினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி வெறும் 19.4 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஜாகீர் கான் மற்றும் ஜவஹல் ஸ்ரீநாத் இருவரும் தலா 44 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நிலையில், முகமது ஷமி 45 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாகவும் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “முதல் நன்றி அல்லாவுக்கு தான். எங்களின் கடின உழைப்பு அனைத்தும் பவுலிங்கில் சரியான ரிதத்தை கண்டறிவதற்காக தான். எங்களின் பவுலர்கள் மிகச்சிறந்த பணியை சிறப்பாக செய்து வருகிறோம். எங்களின் பந்துவீச்சை பார்க்க யாருக்கும் பிடிக்காது என்று சொல்லவே முடியாது. அதேபோல் எங்களின் பந்துவீச்சை நாங்கள் ரசிக்கிறோம். ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுகிறோம். அதன் முடிவுகளை நீங்களே பார்க்கிறீர்கள். 

அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நான் சிறப்பாக பந்துவீச முயற்சித்து வருகிறோம் என்று தான் சொல்ல வேண்டும். சரியான லெந்தில் பிட்ச் செய்து, ரிதத்தை கண்டறிய முயல்கிறேன். ஏனென்றால் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ரிதத்தை மிஸ் செய்தால், மீண்டும் கண்டறிவது கடினமாகதாகிவிடும்.

அதனால் தொடக்கம் முதலே சரியான லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம். அது சிறந்த முடிவுகளை அணிக்கு கொடுக்கும் போது, அதனை ஏன் மாற்ற வேண்டும். அது கடினமானதாக இருந்தாலும், மீண்டும் அப்படியே செயல்பட முயல்வேன். வெள்ளை பந்தில் சரியான லைன் மற்றும் லெந்தில் பிட்ச் செய்தால், நிச்சயம் ஸ்விங் கிடைக்கும். அதனால் இதில் ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் எல்லாம் இல்லை.

நல்ல உணவு, தெளிவான மனநிலை மற்றும் மக்களின் ஆதரவு இருக்க வேண்டும். இந்தியாவில் எங்களுக்கு கிடைத்து வரும் ஆதரவு அளவிட முடியாது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்திய அணிக்கு ஏராளமான ஆதரவு எப்போதும் இருக்கும். அதனால் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்று முயற்சிப்பதாக” தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை