ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் சேர்ப்பு!

Updated: Fri, Nov 03 2023 11:47 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியளது. இத்தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் உறுதியாக முன்னேறியுள்ள நிலையில், அடுத்த இரு இடங்களைப் பிடிக்க ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலைவிவருகிறது.

இந்நிலையில், நியூசிலாந்து அணியின்  கேப்டன் கேன் வில்லியம்சன், லோக்கி ஃபர்குசன் மற்றும் மார்க் சேப்மேன்  ஆகியோர் காயம் காரணமாக பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அந்த வரிசையில் தற்போது மாட் ஹென்றி மற்றும் ஜேம்ஸ் நீஷம் இணைந்துள்ளனர்.

நியூசிலாந்து அணிக்காக மாட் ஹென்றி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் நியூசிலாந்து பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், “மாட் ஹென்றிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம். அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. ஸ்கேன் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். ஒருநாள் போட்டிகளில் மாட் ஹென்றி நியூசிலாந்து அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். 

நியூசிலாந்து அணியின் கைல் ஜேமிசன் தயாராக இருக்கிறார். அவர் நியூசிலாந்து அணியுடன் இணைய உள்ளார். அவர் நாளை (நவம்பர் 4) நடைபெறும் போட்டிக்கு அணியில் இணைவதற்கு தயாராக இருப்பார் என்று கூறியுள்ளார். 

இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்ற நியூசிலாந்து அணி கடந்த 3 போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளது. இதன்மூலம்,  8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 4ஆவது இடத்தில் உள்ளது. நாளை பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து பாகிஸ்தானை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை