Advertisement

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடவுள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ள காரணத்தால், இப்போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலிலாவது முன்னேற்றமடைய முயற்சிக்கும்.

Advertisement

அதேசமயம் ஹைதராபாத் அணி இப்போட்டியில் வெல்லும் பட்சத்தில் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால் அந்த அணியும் வெற்றிபெற கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. முன்னதாக இவ்விரு அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசனின் மோதிய லீக் போட்டியானது ஐபிஎல் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதிலும் குறிப்பாக ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 277 ரன்களை குவித்து, ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய அணி எனும் வரலாற்று சாதனையை படைத்திருந்து குறிப்பிடத்தக்கது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 172 ரன்களாக உள்ளது. மேலும் இங்கு இரண்டாம் பாதியில் பனியின் தாக்கம் இருக்கும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 22
  • மும்பை இந்தியன்ஸ் - 12
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 10

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Advertisement

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஜெரால்டு கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சென், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், தங்கராசு நடராஜன், ஜெய்தேவ் உனத்கட்.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஹென்ரிக் கிளாசென், இஷான் கிஷான்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), டிராவிஸ் ஹெட் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா
  • பந்துவீச்சாளர்கள் - ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி
  • ஆல்-ரவுண்டர்கள் - புவனேஷ்வர் குமார், பாட் கம்மின்ஸ், ஜஸ்பிரித் பும்ரா.

MI vs SRH Dream11 Prediction, Today Match Prediction, Today Match MI vs SRH, MI vs SRH Dream11 Team, Fantasy Cricket Tips, MI vs SRH Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Mumbai Indians vs Sunrisers Hyderabad

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News