அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் இதுதான் - மைக்கேல் வாகன் கணிப்பு!

Updated: Wed, May 01 2024 19:47 IST
Image Source: Google

ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.

அந்தவகையில் தற்போதுவரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற முக்கிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அணித்தேர்வு குறித்தும், அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ள அணிகள் குறித்தும் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது என்பது குறித்து கணித்துள்ளார். அதன்படி, “இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளே முன்னேறும்” என்று தெரிவித்துள்ளார். 

அவரின் கணிப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில் மைக்கேல் வாகனின் இந்த கருத்தானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை