கிறிஸ் கெயில், வாட்சன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் மிட்செல் மார்ஷ்!

Updated: Tue, Jul 22 2025 13:22 IST
Image Source: Google

Mitchell March Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரில் முன்னிலைப் பெறும். மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை சமன்செய்ய முயற்சி செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அதன்படி இப்போட்டியில் மிட்செல் மார்ஷ் பேட்டிங்கில் 60 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 போட்டியில் தனது 421 ரன்களைப் பூர்த்தி செய்வார். இதனை அவர் எட்டும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பாட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

  • டேவிட் வார்னர் - 15 போட்டிகளில் 662 ரன்கள்
  • கிறிஸ் கெய்ல் - 14 போட்டிகளில் 420 ரன்கள்
  • மிட்செல் மார்ஷ் - 11 போட்டிகளில் 361 ரன்கள்
  • ஆண்ட்ரே ரஸ்ஸல் - 13 போட்டிகளில் 265 ரன்கள்
  • ஜான்சன் சார்லஸ் - 10 போட்டிகளில் 246 ரன்கள்

இதுதவிர்த்து இப்போட்டியில் மிட்செல் மார்ஷ் ஒரு விக்கெட்டை கைப்பற்றும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடிப்பார். தற்சமயம் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 14 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஆடாம் ஸாம்பா 11 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

விண்டிஸுக்கு எதிராக அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்கள்

  • ஜோஷ் ஹேசில்வுட் - 14 விக்கெட்டுகள்
  • மிட்செல் ஸ்டார்க் - 14 விக்கெட்டுகள்
  • ஆடம் ஜாம்பா - 11 விக்கெட்டுகள்
  • ஷேன் வாட்சன் - 8 விக்கெட்டுகள்
  • மிட்செல் மார்ஷ் - 8 விக்கெட்டுகள்
Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், கூப்பர் கோனொலி, டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட், ஜோஷ் இங்கிலிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மாட் குஹ்னெமன், க்ளென் மேக்ஸ்வெல், மிட்ச் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை