AUS vs WI: மிட்செல் மார்ஷுக்கு கரோனா தொற்று உறுதி!

Updated: Thu, Feb 08 2024 11:40 IST
AUS vs WI: மிட்செல் மார்ஷுக்கு கரோனா தொற்று உறுதி! (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்து ஆஸ்திரேலிய அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹாபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு கரோனா தோற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் மிட்செல் மார்ஷுக்கு தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ஐசிசி நெறிமுறைகளை பின்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் அணியை வழிநடத்தவுள்ளார். 

அதாவது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்கள் விளையாட ஐசிசி சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்கள் தனி உடைமாற்றும் அறையை பயன்ப்படுத்த வேண்டும், களத்தில் சக வீரர்களை நெருங்காமல் தள்ளி இருக்க வேண்டும் போன்ற நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதானைப் பின் பற்றி மிட்செல் மார்ஷ் நாளைய போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவார்.

 

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் போது கேமரூன் க்ரீனும், ஒருநாள் தொடரின் போது ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் இருவரும் நெறிமுறைகளை கடைபிடித்து போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கே), சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டார்ஃப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை