Mitchell Starc Video: தென் அப்பிரிக்கா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சிறப்பு சாதனை படைத்துள்ளார்.

Advertisement

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங்  செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த் அணியில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டார் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து 169 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஐடன் மார்க்ராம் மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சிறப்பு சாதனையை படைத்துள்ளார். அந்தவகையில் ஐசிசி இறுதிப்போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.

முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமில் 6 முறை ஐசிசி இறுதிப்போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில், தற்போது மிட்செல் ஸ்டார்க் 6 முறை ஐசிசி இறுதிப்போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 8 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ஐசிசி இறுதிப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள்

  • மிட்செல் ஸ்டார்க் - 6 இன்னிங்ஸ்களில் 11 விக்கெட்டுகள்
  • முகமது ஷமி - 6 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகள்
  • ட்ரெண்ட் போல்ட் - 5 இன்னிங்ஸ்களில் 8 விக்கெட்டுகள்
  • ரவீந்திர ஜடேஜா - 10 இன்னிங்ஸ்களில் 8 விக்கெட்டுகள்
  • கைல் ஜேமிசன் - 3 இன்னிங்ஸ்களில் 8 விக்கெட்டுகள்
Advertisement

இது தவிர்த்து உலக டெஸ்ட் சாம்பிய்ன்ஷிப் 2023-25 ​​சுழற்சியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் சக வீரரான பாட் கம்மின்ஸின் சாதனையையும் மிட்செல் ஸ்டார்க் சமன்செய்துள்ளார். இவர்கள் இருவரும் தலா 74 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த பட்டியலில் இரண்டாம் இட்த்தில் உள்ளனர். அதேச்மயம் இந்த பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 77 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். 

தென் அப்பிரிக்க பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேட்ச்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News