ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். அவரது மனைவில் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி.
Advertisement
இந்நிலையில் கடந்த ஆண்டு முழுவது மிட்செல் ஸ்டார்க் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்று அலிசா ஹீலி தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து பேசிய அலிசா ஹீலி, “மிட்செல் ஸ்டார்க் கடந்தாண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை. அவர் தனது தந்தையுடன் நேரத்தை செலவிடவே விரும்பினார்.
ஆனால் அவரது தந்தை அதை விரும்பவில்லை. ஸ்டார்க் ஆஸ்திரேலியாவிற்காக விளையாடுவதையே அவர் பெருமையாக நினைத்தார். அதனால் ஸ்டார்க்கை ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுமாறு அனுப்பிவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு பிப்ரவரி மாதம் ஸ்டார்க்கின் தந்தை பாவுல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement