அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஃபின் ஆலன். மேத்யூ ஷார்ட், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஜோஷ் இங்கிலிஸ், ஷெர்ஃபேண்ட் ரூதர்ஃபோர்ட் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

இதனால் யூனிகார்ன்ஸ் அணி 33 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ஹசன் கான் - கேப்டன் கோரி ஆண்டர்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களை எடுத்திருந்த ஹசன் கான் தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய கோரி ஆண்டர்சன் அரைசதம் அடித்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

Advertisement

இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அனி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி தரப்பில் நஸ்தும் கெஞ்சிகே, டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் அணியில் ருபென் கிலிண்டன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த டெவால்ட் பிரீவிஸ் - நிக்கோலஸ் பூரன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் சிறப்பாக விளையாடி வந்த டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். 

பின்னர் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 56 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் டெவால்ட் பிரீவிஸ் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கீரென் பொல்லார்ட் 4 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 20 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூயார்க் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே சேர்த்தது. யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் மேத்யூ ஷார்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்கை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News