டல்லாஸ்: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி தொடர்ச்சியாக 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. 

Advertisement

எம்ஐ நியூயார்க் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் டிம் செஃபெர்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ ஷார்ட் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் டிம் செஃபெர்ட் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அடுத்து களமிறங்கிய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் மெக்குர்க்கும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அதன்பின் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 91 ரன்களை சேர்த்த நிலையில் மேத்யூ ஷார்ட்டும், ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் மெக்குர்க்கும் விக்கெட்டை இழக்க, இறுதியில் கிருஷ்ணமூர்த்தி 27 ரன்களையும், ஹசன் கான் 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களைச் சேர்த்தது. 

பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் மொனாங்க் படேல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்களுடைய அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 119 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 60 ரன்களில் மொனாங்க் படேலும், 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 70 ரன்களில் குயின்டன் டி காக்கும் தனது விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கீரன் பொல்லார்ட் 34 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை மட்டுமே சேர்த்தது. யூனிகார்ன்ஸ் தரப்பில் சேவியர் பார்ட்லெட், ரொமாரியோ ஷெஃபர்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகர்ன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் எம்ஐ நியூயார்க்கை வீழ்த்தியதுடன், நடப்பு எம்எல்சி தொடரில் தொடர்ச்சியாக 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News