MLC 2025: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்குக்கும் முக்கிய காரணமாக அமைந்தார்.

Advertisement

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸிஸ் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய சமித் படேல் 3 ரன்னிலும், சாய்தேஜா முக்காமல்லா 25 ரன்களிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 25  ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்னர். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டோனவன் ஃபெரீராவும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்த கையோடு ஃபெரீராவும் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் சதமடித்து அசத்தியதுடன் 5 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என 103 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் தரப்பில் ஜார்ஜ் லிண்டே, ருஷில் உகர்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் அணிக்கு குயின்டன் டிக் காக் மற்றும் நிக்கோலஸ் பூரன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிக்கோலஸ் பூரன் 8 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய மொனாங்க் படேல் 6 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான குயின்டன் டி காக் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்னில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய தஜிந்தர் தில்லனும் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த கீரென் பொல்லார்ட் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தின்ர். 

Also Read: LIVE Cricket Score

இதில் அபாரமாக விளையாடிய பொல்லார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களைச் சேர்த்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த கீரன் பொல்லார்டும் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் நியூயார்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News