மொயீன் ஒரு அற்புதமான வீரர் - ஜோ ரூட் புகழாரம்!
இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2014ஆம் ஆண்டு அறிமுகமான மொயீன் அலி 64 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
இதுவரை பந்துவீச்சில் 5 முறை ஐந்து விக்கெட்டுகள் உள்பட195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர்,பேட்டிங்கில் 5 சதங்களுடன் 2,914 ரன்களையும் அடுத்துள்ளார்.
மேலும் மொயீன் அலி ஆடிய 64 டெஸ்ட் ஆட்டங்களில் 27 ஆட்டங்களுக்கும் ஜோ ரூட் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்நிலையில் மொயீன் அலி ஓய்வு குறித்து ஜோ ரூட் கூறுகையில், "டெஸ்ட் கிரிக்கெட்டில் சில அற்புதமான விஷயங்களைச் செய்துள்ளார். இணைந்து விளையாடுவதற்கு அவர் ஒரு சிறந்த வீரர். அவருடன் ஓய்வறையைப் பகிர்ந்ததை முழுமையாக அனுபவித்துள்ளோம். களத்திலும், களத்துக்கு வெளியேவும் எங்களுக்கு நிறைய அற்புதமான நினைவுகள் உள்ளன." என்று தெரிவித்துள்ளார்.