கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது அமீர், டி20யில் இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை வீழ்த்தி பெரிய சாதனை படைத்தார். அதன்படி இத்தொடரின் 13ஆவது போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிராக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அமீர் 2.3 ஓவர்களில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் போது அவர் மெய்டன் ஓவரையும் வீசினார்.

Advertisement

இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியவர் என்ற பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரையும் பின்னுக்கு தள்ளியுள்ளார். அதன்படி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் 286 டி20 இன்னிங்ஸ்களில் 24 மெய்டன் ஓவர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். அதேசமயம் முகமது அமீர் 302 இன்னிங்ஸ்களில் 25 மெய்டன் ஓவர்கள் வீசி தற்போது மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

Advertisement

அதேசமயம் இந்த பட்டியளில் வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன் டி20 கிரிக்கெட்டில் 522 இன்னிங்ஸ்களில் 30 மெய்டன் ஓவர்கள் வீசி முதலிடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் 444 இன்னிங்ஸ்களில் 26 மெய்டன் ஓவர்கள் வீசி இரண்டாம் இடத்தில் உள்ளார். இதில் அமீர், நரைன் மற்றும் ஷாகிப் ஆகியோர் உலகம் முழுவதும் டி20 லீக் விளையாடி வரும் நிலையில், புவனேஷ்வர் குமார் இந்தியாவில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர்

  • சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்) - 522 இன்னிங்ஸ்களில் 30 மெய்டன் ஓவர்கள்
  • ஷாகிப் அல் ஹசன்(வங்கதேசம்) - 444 இன்னிங்ஸ்களில் 26 மெய்டன் ஓவர்கள்
  • முகமது ஆமிர் (பாகிஸ்தான்)- 302 இன்னிங்ஸ்களில் 25 மெய்டன் ஓவர்கள்
  • புவனேஷ்வர் குமார் (இந்தியா)- 286 இன்னிங்ஸ்களில் 24 மெய்டன் ஓவர்கள்
  • ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா ) - 233 இன்னிங்ஸ்களில் 22 மெய்டன் ஓவர்கள்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News