ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார் முகமது நபி!

Updated: Wed, Feb 14 2024 18:37 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஃப்கானிஸ்தன் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகலேவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் முதலிடத்தில் தொடர்கிறார். அவரைத்தொடர்ந்து இந்திய அணியின் ஷுப்மன் கில் இரண்டாம் இடத்திலும், விராட் கோலி மூன்றாம் இடத்திலும், ரோஹித் சர்மா நான்காம் இடத்திலும் தொடர்கின்றனர். 

அதேசமயம் ஆஃப்கான் தொடரில் இரட்டை சதமடித்த இலங்கை வீரர் பதும் நிஷங்கா 10 இடங்கள் முன்னேறி 18ஆவது இடத்திற்கும், சரித் அசலங்கா 5 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இதில் இந்திய அணியைச் சேர்ந்த முகமது சிராஜ் 4ஆம் இடத்திலும், ஜஸ்ப்ரித் பும்ரா 5 இடத்திலும் தொடர்கின்றனர். 

ஐசிசி ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியளில் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளி ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது நபி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இலங்கை ஒருநாள் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதின் மூலம் முகமது நபி ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியளில் சிங்கந்தர் ரஸா, ரஷித் கான், அசத் வாலா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை