இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாரூதின். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தே்ாந்தெடுக்கப்பட்டார். 

Advertisement

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சட்டவிதிகளை மீறியதாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் உயர்மட்ட குழு அவரை தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. 

Advertisement

அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில் ‘10 ஓவர் கிரிக்கெட்டில் பங்கேற்கும் துபாயைச் சேர்ந்த நார்த்தன் வாரியர்ஸ் என்ற தனியார் கிரிக்கெட் கிளப்பின் ஆலோசகராக நீங்கள் (அசாருதீன்) இருக்கிறீர்கள். இந்த 10 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்கவில்லை. அந்த கிளப்பின் ஆலோசகராக இருப்பதை நீங்கள் எந்தவொரு நேரத்திலும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கோ, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கோ தகவல் தெரிவித்தது கிடையாது. 

இரட்டை ஆதாயம் பெறும் வகையிலான பொறுப்பின் மூலம் கிரிக்கெட் வாரிய விதிமுறைகளை மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள அசாருதீன், தனக்கு எதிரான சில உறுப்பினர்களின் பழிவாங்கும் நடவடிக்கை இது என்று சாடியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழு விசாரணை நடத்தியது. இதன் முடிவில் முகமது ஆசாரூதின் பிசிசிஐயின் விதிமுறைகளை ஏதும் மீறவில்லை என்றும், இதனால் அவர் மீண்டும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக செயல்படலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News