சிஎஸ்கே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளது - முகமது கைஃப்!

Updated: Sat, Nov 02 2024 11:29 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் அணிகள் வீரா்களை தக்க வைத்துக் கொள்ள அக்டோபர் 31ஆம் தேதியே கடைசி நாள் என்றும் பிசிசிஐ கெடு விதித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர்.

அந்தவகையில் சென்னை அணியும் நேற்று மாலை தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை தக்கவைத்து கொள்வதாக அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அந்த அணி அன்கேப்ட் வீரராக தேர்வு செய்துள்ளது.

மேற்கொண்டு அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தலா ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், மதீஷா பதிரானாவை ரூ,13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்குக்கு தக்கவைத்துள்ளது. இதில் ஆன்கேப்ட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் எஸ் தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில் மகேந்திர சிங் தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைத்ததன் மூலம் சிஎஸ்கே அணி ரூ.10-15 கோடிகளை சேமித்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன்னரே சிறப்பான செயல்முறையை வெளிப்படுத்தியுள்ளது. ஏனெனில் தோனியை அன்கேப்ட் வீரராக தேர்வுசெய்ததன் மூலம் அந்த அணி 10 முதல் 15 கோடி வரை சேமித்துள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

மேலும் எம்எஸ் தோனி இன்னும் ஒரு வருடம் விளையாட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்பினோம். சிஎஸ்கே அங்கு மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். ஆம், அவர்கள் குறைவான பணத்தை செலவழித்து தோனியை தக்கவைத்துள்ளது. இதன்மூலம் சேமித்த தொகையானது வீரர்கள் ஏலத்தில் பெரிய வீரர்களை வாங்க சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பளிக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை