இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் முதல் பகுதி தற்பொழுது நிறைவடைந்து இருக்கிறது. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதல் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் கேஎல்.ராகுல் முதலில் பந்துவீச்சை இந்தியா மேற்கொள்ளும் என அறிவித்தார். இந்திய அணியில் சிராஜ் இடம்பெறவில்லை.

Advertisement

இதன்படி இந்திய அணிக்கு முதல் ஓவரை வீசிய முகமது சமி மிட்சல் மார்சை ஸ்லிப்பில் கில் மூலம் வெளியேற்றினார். இதற்கு அடுத்து வார்னர் தந்த எளிய கேட்சை ஸ்ரேயாஷ் சர்துல் தாக்கூர் பந்துவீச்சில் தவறவிட்டார். இதற்கு அடுத்து ஸ்மித் மற்றும் வார்னர் நிலைத்து நின்று விளையாட ஆரம்பித்தார்கள். ரவீந்திர ஜடேஜா வந்து 53 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த வார்னரை வெளியேற்றினார். இதற்கு அடுத்து இரண்டாவது ஸ்பெல்க்கு வந்த முகமது சமி ஸ்மித்தை 60 பந்துகளில் 41 ரன்களில் வெளியேற்றினார்.

Advertisement

இதற்கு அடுத்து மார்னஸ் லபுசேன் 39, கேமரூன் கிரீன் 31, ஜோஸ் இங்கிலீஷ் 45, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 29, மேத்யூ ஷார்ட் 2, சீன் அப்பாட் 2, ஆடம் ஜாம்பா 2, பாட் கம்மின்ஸ் 21* என ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணி 276 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் வாய்ப்பு பெற்ற முகமது சமி மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 

 

இன்று 10 ஓவர்கள் வீசிய முகமது சமி 51 ரன்கள் விட்டுத் தந்து, ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய மிகச்சிறந்த பந்து வீச்சு இதுவாக அமைந்திருக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இது அவருடைய இரண்டாவது ஐந்து விக்கெட் கைப்பற்றிய நிகழ்வாக அமைந்திருக்கிறது. பதினாறு வருடங்களுக்குப் பிறகு ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய 2ஆவது இந்திய வீரர் எனும் சாதனையையும் முகமது ஷமி படைத்துள்ளார். இவருக்கு முன் அஜித் அகர்கார் 12 முறையும், முகமது ஷமி 11 முறையும், அனில் கும்ப்ளே 10 முறையும், ஜவாகல் ஸ்ரீநாத் 10 முறையும் 4 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.    

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News